பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் : கரையோர மக்களே உஷார்!

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் : கரையோர மக்களே உஷார்!
X

கோப்பு படம்

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகள், ஏரிகள் மிக வேகமாக நிரம்பி வருகின்றன. பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பவானிசாகர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி அதன் உபரி நீர், தற்பொழுது வெளியேறி கொண்டுள்ளது.

தற்போது அணையில் 104. 1 அடி எட்டி உள்ளதால் எந்த நேரத்திலும் பவானிசாகர் அணையில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும், இதனால் பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேறும் பகுதிகளான, பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள மக்கள், பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயருமாறும், பவானி ஆற்றில் மீன் பிடிக்கவோ துணி துவைக்கவும், மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் வரை, பொதுமக்கள் ஆற்றுக்குள் செல்ல வேண்டாம் எனவும், ஈரோடு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் பவானிசாகர் முதல், கூடுதுறை வரை உள்ள பவானி ஆற்றுப் பகுதிகளில், மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!