கோபிசெட்டிபாளையம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது
X

பைல் படம்

கோபிசெட்டிபாளையம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் தனியார் அரிசி ஆலை பின்புறம் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கோபி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரித்தனர்.

அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட மொடச்சூரை சேர்ந்த கார்த்தி மற்றும் திப்புராஜ், கோசனத்தை சேர்ந்த சந்திரசேகர், வண்டிபேட்டையை சேர்ந்த ஆதிள், பச்சமலையை சேர்ந்த குணசேகரன் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.500 பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு