பவானி அருகே ஸ்பின்னிங் மில்லில் தீ விபத்து

பவானி அருகே ஸ்பின்னிங் மில்லில் தீ விபத்து
X

பைல் படம்.

பவானி அருகே ஸ்பின்னிங் மில்லில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதில் 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நரேந்திர குமார் என்பவருக்கு சொந்தமான ஸ்பின்னிங் மில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று வழக்கம்போல், பணியாளர்கள் வேலை செய்யும் போது, கழிவு பஞ்சில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, பவானி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயிணை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம், என தீயிணைப்பு துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்து காரணமாக, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கருகி சேதமடைந்தன.

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்