பவானி கூடுதுறையில் தீ தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்

பவானி கூடுதுறையில் தீ தடுப்பு விழிப்புணர்வு  பிரசாரம்
X

பவானி கூடுதுறையில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் தீ தடுப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் தீ தடுப்பு வழிமுறைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பவானி தீயணைப்பு நிலைய அலுவலர் காந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் கோவில் வளாகத்தில் உள்ள தீயணைப்பு கருவியாக கொண்டு பயன்படுத்தும் விதம்,எண்ணெய் தீ விபத்து அணைக்கும் முறை மற்றும் மின்சார விபத்தில் செய்ய வேண்டிய செயல்கள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.


மேலும், தொடர்ந்து பக்தர்களுக்கு தீ விபத்து சமயத்தில் நம்பிக்கை அளிப்பது உள்ளிட்டவை எடுத்து கூறியும் தீயை அணைக்கும் வழி முறைகள் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி ஆணையர் சாமிநாதன் பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் பலர் பங்கேற்று பயனடைந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!