அம்மாபேட்டை அருகே கரும்பு காட்டில் தீ விபத்து

அம்மாபேட்டை அருகே கரும்பு காட்டில் தீ விபத்து
X

கோப்பு படம்

அம்மாபேட்டை அருகே கரும்பு காட்டில் தீ விபத்தில், 2.5 ஏக்கர்‌ பரப்பிலான கரும்புகள் எரிந்து சேதமாகின.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்துள்ள பூதப்பாடி, ஊஞ்சப்பாளையம், கொத்துக்காரர் தோட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயி. இவர், தனது தோட்டத்தில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த கரும்புத் தோட்டத்தில், எதிர்பாராமல் தீப்பிடித்தது.

காற்று வீசியதால் தீ மளமளவென பிற பகுதிகளுக்கும் பரவியது. இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அந்தியூர் தீயணைப்புப் படையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதில், சுமார் 2.50 ஏக்கர் பரப்பிலான கரும்புகள் எரிந்து சேதமடைந்தன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!