கோபிசெட்டிபாளையம் அருகே இன்று அதிகாலை வீட்டில் தீ விபத்து

கோபிசெட்டிபாளையம் அருகே இன்று அதிகாலை வீட்டில் தீ விபத்து
X

பைல் படம்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணக்கம்பாளையத்தில் இன்று அதிகாலை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாவாயம்மாள் (வயது 80). பாவாயம்மாள் இவரது அண்ணன் மகன் பராமரிப்பில் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், இன்று அதிகாலை பாவாயம்மாள் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை கண்ட, அக்கம் பக்கத்தினர், பாவாயம்மாளை பத்திரமாக மீட்டனர்.

இதுகுறித்து, தகவலறிந்து வந்த கோபி தீயணைப்பு துறையினர், வருவதற்குள் வீட்டில் இருந்த கட்டில் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என சுமார் 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. தக்க சமயத்தில் தீ விபத்தில் இருந்து மூதாட்டியை மீட்டதில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து, பங்காளப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!