கோபிசெட்டிபாளையம் அருகே விஷ வண்டுகளை அழித்த தீயணைப்பு துறையினர்

கோபிசெட்டிபாளையம் அருகே விஷ வண்டுகளை அழித்த தீயணைப்பு துறையினர்
X

விஷ வண்டுகளை தீயணைப்பு துறையினர் தீவைத்து அழித்த போது எடுத்த படம்.

சரவண தியேட்டர் சாலை அருகே உள்ள பிஸ்கட் மற்றும் ரொட்டி தயாரிப்பு நிறுவத்திலிருந்த விஷ வண்டுகளை தீயணைப்பு துறையினர் தீ வைத்து அழித்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சரவண தியேட்டர் சாலையில் உள்ள ஈஸ்வரன் கோவில் வீதியில் பிஸ்கட் மற்றும் ரொட்டி தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், நிறுவனத்தின் மேற்கூரையில் நேற்றிரவு ஏராளமான விஷ வண்டுகள் இருந்துள்ளது‌. இதனையடுத்து, நிறுவனத்தினர் விஷ வண்டுகளை விரட்ட முடியாத நிலையில், கோபி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் உயரமான ஏணி மூலம் மேலே ஏறி, தீவைத்து விஷ வண்டுகளை அழித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!