பவானி அருகே நூல் குடோனில் தீ விபத்து: ரூ.20 லட்சம் நூல்கள் சேதம்

பவானி அருகே நூல் குடோனில் தீ விபத்து: ரூ.20 லட்சம் நூல்கள் சேதம்
X
நூல் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து.
பவானி அருகே காளிங்கராயன்பாளையத்தில் நூல் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான நூல்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

ஈரோடு மாவட்டம், பவானி ஆர்ஜி வலசு பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால்.நூல் குடோன் உரிமையாளர். இவர் காளிங்கராயன்பாளையத்தில் கடந்த 5வருடங்களாக ராமநாதபுரம் கூட்டுறவு சங்கத்தில் இருந்து நூல்களை வாங்கி அதனை கோண்களாக மாற்றி தரும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

இந்தநிலையில் நேற்று இரவு எப்போதும் போல பணியாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த நிலையில் அதிகாலையில் திடீரென இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ பற்றியது.

இதையடுத்து ஊழியர்கள் அலறியடித்தப்படி வெளியே வந்தனர்.இதையடுத்து பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 20லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோண்டி நூல்கள் மற்றும் இயந்திரங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமடைந்தன. தொடர்ந்து இந்த தீ விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future