கவுந்தப்பாடி கிருஷ்ணாபுரம் அரிசி ஆலை வளாகத்தில் தீ விபத்து

கவுந்தப்பாடி கிருஷ்ணாபுரம் அரிசி ஆலை வளாகத்தில் தீ விபத்து
X

தீயணைப்பு துறையினர் தீயை அணைத்த போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த கவுந்தப்பாடி கிருஷ்ணாபுரம் அரிசி ஆலை வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின் வளாகத்தில் ஏராளமான தேங்காய் தொட்டிகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வளாகத்தில் உள்ள தேங்காய் தொட்டியில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக, ஆலையில் இருந்த தொழிலாளர் வெளியேற்றப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பின்னர், தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு தீயானது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. இதனால், பெரும் தீவிபத்து தவிர்க்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!