பவானி அருகே தேங்காய் நார் நிறுவனத்தில் தீ விபத்து: ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்

பவானி அருகே தேங்காய் நார் நிறுவனத்தில் தீ விபத்து: ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்
X

மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பற்றி எரிந்த தேங்காய் நார்கள்.

பவானி அருகே பெரியவடமலைபாளையத்தில் செயல்பட்டு வரும் தேங்காய் நார் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டு ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த பெரியவடமலைபாளையத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது தேங்காய் நார் நிறுவனத்தில் எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டது.

தகவலறிந்த பவானி தீயணைப்பு நிலைய அலுவலர் காந்தி தலைமையிலான தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று ஒரு மணி நேர போராட்டத்துக்குப்பின் தீயை அணைத்தனர்.

தீயில் எரிந்து கருகிய தேங்காய் நார் உள்ளிட்ட பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!