/* */

அத்தாணி: மின் உராய்வு ஏற்பட்டு லாரியில் இருந்த வைக்கோலில் தீ விபத்து

கோபிசெட்டிபாளையம் அடுத்த அத்தாணி அருகே உள்ள கள்ளிப்பட்டியில் மின் உராய்வு ஏற்பட்டு லாரியில் இருந்த வைக்கோலில் தீ விபத்து ஏற்பட்டது.

HIGHLIGHTS

அத்தாணி: மின் உராய்வு ஏற்பட்டு லாரியில் இருந்த வைக்கோலில் தீ விபத்து
X

லாரியில் ஏற்பட்ட தீயிணை தீயணைப்பு துறையினர் போராடி அணைத்த போது எடுத்த படம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த அத்தாணி அருகே உள்ள கள்ளிப்பட்டி கிளுவன்காட்டுத் தோட்டத்தை சேர்ந்தவர் சிவராஜ். இவரது தோட்டத்தில் இருந்து நேற்று காலை வைக்கோலை ஏற்றி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது அப்பகுதியில் இருந்த மின்கம்பி, வைக்கோல் போரில் உரசியதால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இதையறிந்த லாரி ஓட்டுனர் மற்றும் அப்பகுதியில் உள்ளோர் தீயை அணைக்க முற்பட்டனர்.

மேலும் அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர்.விரைந்து சென்ற அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த விபத்தில் லாரியின் பின்பக்க பாகங்கள் சேதமடைந்தது. இதேபோல் சுமார் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வைக்கோலும் தீ விபத்திற்கு இரையாகியது. தகவலறிந்த வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினர்.

Updated On: 8 April 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்