பெருந்துறையில் புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

பெருந்துறையில் புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
X

புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த அதிகாரிகள்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதிகளில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு செய்து புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

பெருந்துறை பகுதிகளில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு செய்து புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெருந்துறை உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணியம் தலைமையிலான குழுவினர் பவானி ரோடு, காஞ்சிக்கோவில் ரோடு, சிலேட்டர் நகர், அண்ணா நகர் மற்றும் ஈரோடு ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள 15க்கும் மேற்பட்ட கடைகளில் நேற்று (ஜன.21) ஆய்வு செய்தனர்.


இந்த ஆய்வின் போது, அண்ணா நகரில் உள்ள ஒரு பெட்டிக்கடை மற்றும் ஈரோடு ரோடு பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து ஒவ்வொரு கிடைக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் 2 கடைகளுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதனையடுத்து, கடைகளின் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டு, கடைகள் தொடர்ந்து இயங்காத வகையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பாலித்தீன் பைகள் பயன்படுத்திய மேலும் 5 கடைகளுக்கு ரூ.3,750 அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் கூறுகையில், ஈரோடு மாவட்டம் முழுவதும் அனைத்து துறை அலுவலர்களுடன் இணைந்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும். பொதுமக்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தாலோ அல்லது உணவு பொருளில் ஏதாவது குறைபாடுகள் இருந்தாலோ பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணை தொடர்பு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா