ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: நாளை வெளியாகிறது இறுதி வேட்பாளர்கள் பட்டியல்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: நாளை வெளியாகிறது இறுதி வேட்பாளர்கள் பட்டியல்
X

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நாளை (ஜன.20) திங்கட்கிழமை மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது. அவர்களுக்கான சின்னமும் உடனடியாக ஒதுக்கப்படுகிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நாளை (ஜன.20) திங்கட்கிழமை மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது. அவர்களுக்கான சின்னமும் உடனடியாக ஒதுக்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 10ம் தேதி தொடங்கி, கடந்த 17ம் தேதியுடன் முடிவடைந்தது.

இத்தொகுதியில், போட்டியிடுவதற்காக 58 வேட்பாளர்கள் 65 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். நேற்று (ஜன.18ம் தேதி) வேட்புமனு பரிசீலனையின் முடிவில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரக்குமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மா.கீ.சீதாலட்சுமி உள்பட 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து, மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை (ஜன.20ம் தேதி) திங்கட்கிழமை கடைசி நாளாகும். எனவே வேட்பு மனுவை திரும்ப பெற்றுக்கொள்ள விருப்பமுள்ள வேட்பாளர்கள் நாளை மாலை 3 மணிக்குள் வேட்பு மனுவை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, நாளை மாலை தேர்தல் களத்தில் போட்டியிடக் கூடியவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட உள்ளது. இந்த பட்டியல் வெளியான சில மணி நேரங்களில் அந்தந்த வேட்பாளர்களுக்குரிய சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்படும்.

இதற்கான, ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா, தேர்தல் பொது பார்வையாளர் அஜய் குமார் குப்தா, ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான மரு.மனிஷ்.என் உள்ளிட்ட அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!