சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில்கள் திருவிழா பூச்சாட்டுதலுடன் துவக்கம்

சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில்கள் திருவிழா பூச்சாட்டுதலுடன் துவக்கம்
X

பைல் படம்.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில்களின் திருவிழா நேற்று இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் திருவிழா நேற்று இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து பக்தர்கள் வழங்கிய பூக்கள் அம்மனுக்கு சூட்டப்பட்டு பூ சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. நாளை (வியாழக்கிழமை) கம்பம் நடப்படுகிறது. வருகிற டிசம்பர் மாதம் 5-ந் தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து தேரோட்டமும் நடக்கிறது. 7-ந் தேதி கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், மாவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. 8-ந் தேதி கம்பம் பிடுங்கப்படுகிறது. 9-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!