ஆசனூர் அருகே மாட்டுத்தொழுவத்தில் பெண் சிறுத்தை குட்டி: பொதுமக்கள் அதிர்ச்சி

ஆசனூர் அருகே மாட்டுத்தொழுவத்தில் பெண் சிறுத்தை குட்டி: பொதுமக்கள் அதிர்ச்சி
X

மாட்டுதொழுத்தில் படுத்திருந்த சிறுத்தை குட்டி.

ஆசனூர் மாட்டுத்தொழுவத்தில் பெண் சிறுத்தை குட்டி படுத்திருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள ஆசனூர் அடுத்த பங்களாதொட்டியில், மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான மாட்டுதொழுத்தில் சிறுத்தை குட்டி படுத்திருந்தது.

இதுகுறித்து ஆசனூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தை குட்டியை மீட்டு பரிசோதனை செய்ததில் 3 மாதமான பெண் சிறுத்தை குட்டி என்பது தெரியவந்தது.

மேலும், பரிசோதனையில் சிறுத்தைகுட்டி சோர்வுடன் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, சிறுத்தைகுட்டி உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்தவுடன் மீண்டும் தாயிடம் சேர்க்க முயற்சி எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

மாட்டுத்தொழுவத்தில் சிறுத்தைக்குட்டி படுத்திருந்தது குறித்து அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!