சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

சமூக நீதிக்கான  தந்தை பெரியார் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு
X

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

தந்தை பெரியார் விருது பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களுக்கு தந்தை பெரியார் விருது ஒரு லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கம், அரசு சார்பில் வழங்கப்படுகிறது. நடப்பாண்டுக்கான விருதாளரை தேர்வு செய்ய பரிந்துரை வரவேற்கப்படுகிறது.

தகுதியானவர்கள் தாங்கள் செய்த பணி சாதனைகளை விண்ணப்பத்துடன் இணைத்து கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம். வரும் 30க்குள் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கான விண்ணப்பம்' என எழுதி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், 5வது தளம், கலெக்டர் அலுவலகம், ஈரோடு என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare