ஈரோட்டில் பெற்ற குழந்தைகளின் மீது பெட்ரோலை ஊற்றி தீப்பற்ற வைத்த தந்தை கைது
கைது செய்யப்பட்ட திருமலைசெல்வன்.
ஈரோட்டில் குடும்ப தகராறில் பெற்ற குழந்தைகளின் மீது பெட்ரோலை ஊற்றி தீப்பற்ற வைத்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருமலைசெல்வன். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் திருமலைசெல்வன் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சுகன்யா ஒரு மாதத்திற்கு முன்பாகவே குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று அங்கு சாயப்பட்டறை வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக திருமலைசெல்வன், சுகன்யாவின் தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு சுகன்யா மற்றும் திருமலை செல்வன் இருவருக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த திருமலைசெல்வன் தன் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை மனைவி மற்றும் குழந்தைகள் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதில் நான்கு வயது சிறுவன் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை ஆனது அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து சுகன்யா வீரப்பன்சத்திரத்தில் உள்ள ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் புகார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் திருமலைசெல்வனை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது திருமலைசெல்வத்தை அதிரடியாக கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu