அந்தியூரில் ரூ.5.23 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

அந்தியூரில் ரூ.5.23 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
X

பைல் படம்.

புதுப்பாளையத்தில் உள்ள வாழைத்தார் மண்டிக்கு, பல்வேறு ரக வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சென்னம்பட்டி, ஜரத்தல், எண்ணமங்கலம், ஆப்பக்கூடல், அத்தாணி பகுதிகளில் இருந்து விவசாயிகள் 1,100 வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார்கள். வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 22 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 28 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 470 ரூபாய்க்கும், தேன்வாழை தார் ஒன்று 430 ரூபாய்க்கும், பூவன் தார் ஒன்று 450 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 250 ரூபாய்க்கும் ரஸ்தாளி தார் ஒன்று 310 ரூபாய்க்கும், ரொப்பர் தார் ஒன்று 270 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம் 3 ஆயிரத்து 300 தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், 5 லட்சத்து 23 ஆயிரத்து 900 ரூபாய்க்கு வாழை விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்