அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம் ஏரியில் மிதந்த வெண்டைக்காய்

அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம் ஏரியில் மிதந்த வெண்டைக்காய்
X

கெட்டிசமுத்திரம் ஏரியில் மிதந்த வெண்டைக்காய்கள்.

அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம் ஏரியில் சுமார் 1 டன் அளவிலான வெண்டைக்காய்களை கொட்டிய விவசாயிகள்.

அந்தியூர் அருகே கெட்டிசமுத்திரம் ஏரி உள்ளது. ஏரியில் சுமார் 1 டன் அளவிலான வெண்டைக்காய்கள் மிதந்து கொண்டிருந்தன. இதுகுறித்து, அப்பகுதியினர் கூறுகையில், கேரளாவில் இருந்து வியாபாரிகள் இப்பகுதியில் வந்து வெண்டைக்காய்களை வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று வியாபாரிகள் வராத விரக்தியில், வெண்டைக்காய் சாகுபடி செய்த விவாசாயிகள் கெட்டிசமுத்திரம் ஏரியில் மீன்களுக்கு உணவாக கொட்டிவிட்டு சென்றாக தெரிவித்தனர். மேலும், அப்பகுதி மக்கள் வெண்டைக்காயை சேகரித்து எடுத்துச் சென்றனர்.

Tags

Next Story
வாட்சப்புல கால் ரெகார்ட் பண்ணிக்கலாமா , வாங்க எப்புடின்னு பாக்கலாம்