ஈரோடு அருகே இரு சக்கர வாகன விபத்தில் விவசாயி பலி

ஈரோடு அருகே இரு சக்கர வாகன விபத்தில் விவசாயி பலி
X

பைல் படம்.

ஈரோடு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த விவசாயி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு லக்காபுரம் முத்துகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 52). விவசாயி. இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து அவர் மருந்து மற்றும் மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் தர்மலிங்கம் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றார். அவர் வெள்ளபாளையம்- கருக்கம்பாளையம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தபோது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார். இதில் மயங்கி கிடந்த தர்மலிங்கத்தை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!