சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி பலி

சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி பலி
X

கோப்பு படம் 

சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி பலியானது குறித்து, வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனச்சரகம் சிக்கரசம்பாளையம் அருகே உள்ள பீக்கிரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் குருநாதன். விவசாயி. இவருக்கு பீக்கிரிபாளையம் வனப்பகுதியையொட்டி விவசாய நிலம் உள்ளது. இதில் சோளம் பயிரிட்டுள்ளார். தோட்டத்தில் வனவிலங்குகள் நுழைந்து அட்டகாசம் செய்து வந்தது. இதையடுத்து குருநாதன் இரவு நேரத்தில் காவலுக்கு சென்று வந்தார். இதேபோல் நேற்றிரவு படுத்து தூங்கி கொண்டு இருந்தனர்.

அப்போது திடீரென ஒரு காட்டு யானை தோட்டத்துக்குள் நுழைந்தது. இதையடுத்து குருநாதன் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது யானை திடீரென ஆவேசம் அடைந்து தாக்கியது. இதில் குருநாதன் யானையிடம் வசமாக சிக்கி கொண்டார். அவரை யானை தாக்கி கொன்றது. இதுப்பற்றி தெரியவந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். யானை தாக்கி பலியான குருநாதனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சத்தியமங்கலம் வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!