அந்தியூர் அருகே கரடி தாக்கி விவசாயி படுகாயம்
பைல் படம்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள சோளகளை கிராமத்தை சேர்ந்தவர் ஈரைய்யன் (வயது 50). விவசாயி. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் இவர் கால்நடைகளுக்கு தீவனம் கொண்டு வர அருகில் உள்ள காப்புகாட்டிற்கு சென்றுள்ளார். அந்த வேளையில் காப்புகாட்டிற்குள் மறைந்திருந்த கரடி ஒன்று, அவரை கடுமையாக தாக்கியது. இதில் அவருக்கு கண், மார்பு மற்றும் இடது கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. கரடியிடம் இருந்து தப்பிக்க போராடிய நிலையில் கூச்சல் போட்டுள்ளார்.
இதனை தொடந்து அக்கம் பக்கத்தில் இருந்து வந்தவர்கள் கரடியை விரட்டினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பர்கூர் வனச்சரக அலுவலர் மணிகண்டன் , வனவர் அருண்குமார் , வனக்காவலர் வெங்கடேஷ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அங்கு சென்று, காயம் அடைந்த ஈரைய்யனை 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu