ஈரோடு சூளை பகுதியில் போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு: 4 பேர் கைது

ஈரோடு சூளை பகுதியில் போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு: 4 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட 4 பேரை படத்தில் காணலாம்.

ஈரோடு சூளை பகுதியில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் போலி மதுபானங்களை ஏற்றி வந்த வாகனத்தை கும்பகோணம் போலீசார் பிடித்தனர். விசாரணையில் ஈரோடு சூளை பகுதியில் இருந்து போலி மதுபானங்கள் வாங்கி வந்ததாக தெரியவந்தது.

அதன் அடிப்படையில் கும்பகோணம் போலீசார், ஈரோடு போலீசார் உதவியுடன் இன்று சூளை நத்தக்காடு பகுதியில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான இடத்தில் போலி மதுபான ஆலையை கண்டுபிடித்தனர்.

அந்த குடோனில் போலி மதுபானங்கள் தயாரிப்பதற்கு தேவையான எரி சாராயம், பல்வேறு கலர் பொடிகள், மூடிகள், போலி ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார். மேலும், குடோனில் போலி மதுபானம் தயாரித்து வந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai tools for education