ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கும் தேதி டிச.5 வரை நீட்டிப்பு
முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கும் தேதி டிச.5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் வரும் டிச.5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மண்டல கூட்டுறவு. சங்கங்களின் இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக முதலமைச்சர் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினவிழாவில், பொதுப்பெயர் (ஜெனரிக் மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
எனவே, முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோர் நாளிதழ்களில் கடந்த மாதம் நவம்பர் 30ம் தேதி அறிவித்திருந்த நிலையில், தற்போது பொதுமக்கள் நலன் கருதி வரும் டிச.5ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu