ஈரோடு கொங்கு கல்லூரியில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் கண்காட்சி

ஈரோடு கொங்கு கல்லூரியில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் கண்காட்சி
X

கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் கண்காட்சி விற்பனையை கல்லூரி முதல்வர் வாசுதேவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்த போது எடுத்த படம்.

ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் மற்றும் இதர பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது.

ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் மற்றும் இதர பொருட்களின் கண்காட்சி விற்பனை நடைபெற்றது.

ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிறுமச் செயலியல் மற்றும் தொழில்சார் கணக்குப் பதிவியல் துறை சார்பில் "கோர்ப்ரோ ஜில் மார்ட்" என்னும் புவிசார் குறியீடு பெற்ற இந்திய பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் சார்ந்த கண்காட்சி மற்றும் விற்பனை கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்றது.

நீங்கள் விரும்பும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த குழுவில் இணையுங்கள். குழுவுக்கு செல் | ஃபோலோ செய்


இந்த கண்காட்சியை கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல் அறிவுறுத்தலின் படி, முதல்வர் எச்.வாசுதேவன் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்து புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் விற்பனைகளையும், மற்ற கடைகளையும் பார்வையிட்டார்.


இக்கண்காட்சியில், பிரபல புவிசார் குறியீடு பெற்ற ஈரோடு மஞ்சள், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலைமிட்டாய், மணப்பாறை முறுக்கு, ஊட்டி வர்க்கி, பழனி பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களும், அவற்றை வைத்து செய்யப்பட்ட மதிப்பு சேர்க்கப்பட்ட பொருட்களும் விற்பனை செய்யப்பட்டன.


மேலும், இதர உணவுக் கடைகள் பழச்சாறு கடைகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடையகங்கள், விளையாட்டுகள், புகைப்பட நிலையங்கள் என பல்வேறு கடைகளை அத்துறையின் மாணவர்கள் கண்காட்சியில் அமைத்தனர். இக்கண்காட்சியில் ஏறக்குறைய 20 புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.


இதில், 60க்கும் மேற்பட்ட விற்பனையகங்கள் மாணவர்களால் நடத்தப்பட்டது. இக்கல்லூரியை சார்ந்த 3000க்கும் மேற்பட்ட மாணவர்களும், 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் ஆர்வத்துடன் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை பார்வையிட்டும் பல்வேறு பொருட்களை வாங்கியும் சென்றனர்.

மேலும், இக்கண்காட்சி மாணவர்கள் வருங்காலத்தில் தொழில்முனைவோர் ஆவதற்கான பயிற்சித் தளமாக விளங்கியது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!