ஈரோடு பூம்புகாரில் புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருட்களின் கண்காட்சி துவக்கம்

ஈரோடு பூம்புகாரில் புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருட்களின் கண்காட்சி துவக்கம்
X

ஈரோடு மேட்டூர் சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருள்களின் கண்காட்சி மற்றும் விற்பனையினை மாநகராட்சி மேயர் நாகரத்தினம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த போது எடுத்த படம்.

ஈரோடு பூம்புகாரில் புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையினை மாநகராட்சி மேயர் நாகரத்தினம் ரிப்பன் வெட்டி இன்று (நவ.7) துவக்கி வைத்தார்.

ஈரோடு பூம்புகாரில் புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையினை மாநகராட்சி மேயர் நாகரத்தினம் ரிப்பன் வெட்டி இன்று (நவ.7) துவக்கி வைத்தார்.

கலாச்சாரம், பண்பாடு பாரம்பரியம் இவைகளை பேணிக் காக்கும் ஒரு அரசு நிறுவனமாக தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் விளங்கி வருகிறது. கைவினைக் கலைஞர்களின் கைத்திறனால் உருவாக்கப்படும் கைவினைப் பொருட்களுக்கு உயிர் கொடுத்து காப்பதற்காக பல முயற்சிகளை செம்மையாக பூம்புகார் நிறுவனம் செய்து வருகிறது.

கைவினைஞர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் பலவகைக் கண்காட்சிகளை நடத்தி வருவதுடன் மேலும் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு பல வகையான விருதுகளையும் வழங்கி கௌரவித்து வருகிறது.

அதன் அடுத்த நிலையாக, புவிசார் குறியீடு பெற்ற பாரம்பரிய கைவினைப் பொருட்களின் விபரங்களை எல்லோரும் அறியும் விதமாக ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் புவிசார் குறியீடு பெற்ற தமிழ்நாட்டின் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இக்கண்காட்சியானது, வருகின்ற நவம்பர் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், புவிசார் குறியீடு பெற்ற தமிழ்நாடு கைவினைப் பொருட்களான சுவாமிமலை பஞ்சலோக சிலைகள், நாச்சியார்கோவில் பித்தளை குத்துவிளக்குகள், கள்ளக்குறிச்சி மரச்சிற்பங்கள், மாமல்லபுரம் கற்சிற்பங்கள் தஞ்சாவூர் கலைத்தட்டுகள், தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் தஞ்சாவூர் நெட்டி வேலை பத்தமடை பாய், வடசேரி (நாகர்கோயில்) கோயில் நகைகள் ஆகியவை கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியில் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ள அழகிய கைவினை பொருட்களை மக்கள் வாங்கி தங்கள் இல்லத்திற்கு அழகூட்டுவதன் மூலம் இச்சிற்பங்களை உற்பத்தி செய்யும் கைவினைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் என்று பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் அருண் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!