கடம்பூர் அருகே கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு

கடம்பூர் அருகே கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு
X

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானை.

டி.என்.பாளையம் அடுத்த கடம்பூர் அருகே கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு நிலவியது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள கடம்பூர் வனப்பகுதியில் இருந்து நேற்று மதியம் ஒற்றை ஆண் யானை வெளியேறி கிராமத்திற்குள் புகுந்தது. இந்த ஒற்றை ஆண் யானை மூலக்கடம்பூர், ஏரியூர், பகுதியில் ஊருக்குள் புகுந்தது.இதனை கண்ட ஊர்ப்பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டியதை தொடர்ந்து யானை வனப் பகுதிக்குள் சென்றது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!