மே 20ல் ஈரோட்டில் முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

மே 20ல் ஈரோட்டில் முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 20ம் தேதி முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்காகவும் மற்றும் படையில் பணிபுரிவோரின் சார்ந்தோர்களுக்காகவும், சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற (20ஆம் தேதி) நடைபெறுகிறது.

அன்றைய தினம் காலை 10 மணி அளவில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், இக்கூட்டம் நடக்கிறது. எனவே இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஈரோடு மாவட்ட‌ முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களின் சார்ந்தோர்களும் தங்களது கோரிக்கைமனுக்களை இரண்டு பிரதிகளில் நேரில் சமர்ப்பிக்கலாம் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!