செவிலியர் தாக்கியதாக கூறி கைக்குழந்தையுடன் கலெக்டர் ஆபீஸ் வந்த பெண்

செவிலியர் தாக்கியதாக கூறி கைக்குழந்தையுடன் கலெக்டர் ஆபீஸ் வந்த பெண்
X
பெருந்துறை மருத்துவமனையில் செவிலியர், தன்னை தாக்கியதாக கைக்குழந்தையுடன் பெண் ஒருவர், கலெக்டர் ஆபீசில் புகார் அளித்தார்.

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் குமரேசன்-தீபிகா தம்பதியர். குமரேசன் அதே பகுதியில் மருந்தகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இன்று காலை தீபிகா திடீர் மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து அவரை பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் தீபிகாவுக்கு கொரோனா மற்றும் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து பரிசோதனைக்கு சென்ற தீபிகாவை அங்கு பணியிலிருந்த செவிலியர்கள் உரிய பரிசோதனை செய்யாமல் அழைக்கழிக்க விடுவதாகக்கூறி, அதுபற்றி தீபிகா கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் செவிலியர் ஒருவர் தீபீகாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தன்னை தாக்கிய செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தீபிகா தனது கைக்குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தார். அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியதை அடுத்து தீபிகா மற்றும் குடம்பத்தினர் அங்கிருந்து சென்றனர்.

செவிலியர் மீது புகார் அளிக்க கைக்குழந்தையுடன் வந்த பெண்ணால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture