தனியார் செட்டாப் பாக்ஸ் - அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு எச்சரிக்கை

தனியார் செட்டாப் பாக்ஸ் - அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு எச்சரிக்கை
X
அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் தனியார் செட்டாப் பாக்ஸ் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என, கேபிள் டிவி தலைவர் எச்சரித்துள்ளார்.

ஈரோட்டில் உள்ள கேபிள் டிவி கட்டுபாட்டு அறை மற்றும் அரசு கேபிள் டிவி தாசில்தார் அலுவலகத்தில், தமிழக அரசு கேபிள் டிவி தலைவர் குறிஞ்சி சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கேபிள் டிவி தலைவர் குறிஞ்சி சிவக்குமார், ஈரோடு மாவட்டத்தில் சுமார் 93 ஆயிரம் செட்டாப் பாக்ஸகள் பயன்பாட்டில் இருந்த நிலையில் சுமார் 23 செட்டாப் பாக்ஸ்கள் தற்பொழுது பயன்பாட்டில் இல்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக கூறினார்.

இதுபோன்று, பயன்பாட்டில் இல்லாத செட்டாப் பாக்ஸ்களுக்கு ஆப்பரேட்டர்களும் அதிகாரிகளுமே பொறுப்பு. அரசிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ள செட்டப்பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்கவில்லையென்றால், செட்டாப் பாக்ஸ்களுக்கான விலை வசூலிக்கப்படும் என்றார்.

மேலும், சில ஆப்பரேட்டர்கள் அரசு செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்களுக்கு வழங்காமல் தனியார் செட்டாப் பாக்ஸ்களை விற்பதாக புகார் வந்துள்ளது. அது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!