மின்னணு வாக்காளர் அட்டை பதிவிறக்க முகாம்

மின்னணு வாக்காளர் அட்டை பதிவிறக்க முகாம்
X
ஈரோடு மாவட்டத்தில், வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தங்கள், புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே பெறப்பட்ட வாக்காளர் சேர்ப்பு, திருத்தம் தொடர்பான மனுக்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவற்றில் திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக 2,741 ஓட்டுச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு. திருத்தங்களுக்கான படிவம் வழங்கி, புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் பாகம், பக்கம் எண் போன்றவைகளை குறித்து செல்ல ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு, மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டது. வாக்காளர் பெயர், தந்தை பெயர், தொகுதி போன்ற விபரங்களை பதிவு செய்தவுடன், அவர்களது மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யும் வசதி செய்து கொடுத்திருந்தனர். இப்பணிகளை கலெக்டர் சி.கதிரவன், டி.ஆர்.ஓ., முருகேசன் உட்பட பலர் ஆய்வு செய்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி