சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தை தாக்கிய நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்

சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தை தாக்கிய நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்
X
சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தை தாக்கிய நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நல சங்கம் வலியுறுத்தல்.

சென்னையில் உள்ள சத்தியம் தொலைக்காட்சியின் தலைமை அலுவலகத்திற்குள் கடந்த 3ம் தேதி கோயம்புத்தூரைச் சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் திடீரென்று ஆயுதங்களுடன் உள்ளே புகுந்து அலுவலகத்தில் இருந்த பல்வேறு பொருட்களை அடித்து நொறுக்கியும் அங்கிருந்த ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் அராஜகத்தில் ஈடுபட்டார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளி ராஜேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணியிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில், சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தை தாக்கிய குற்றவாளி ராஜேஷ்குமாரிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜேஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ஊடகங்களின் அலுவலகத்தின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் புகைப்பட கலைஞர்கள் மற்றும் பத்திரிக்கை தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நல சங்கத்தின் தலைவர் ரமேஷ், செயலாளர் ஜீவாதங்கவேல், பொருளாளர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர்கள் சுப்பிரமணியம், மூர்த்தி, துணைச் செயலாளர் நவீன், செயற்குழு உறுப்பினர்கள் கோவர்தன், பார்த்திபன், வேலுச்சாமி உள்ளிட்ட ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்