உழவர் அடங்கல் செயலி: பேரிடர் மேலாண்மை துறை வெளியீடு
பைல் படம்.
வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 'உழவர் அடங்கல்' (e-–adangal Mobile App) என்ற மொபைல் ஆப் வெளியிடப்பட்டுள்ளது. அதில், விவசாயிகள் தங்கள் நிலத்தின் பயிர் விபரம், கிராம கணக்கு எண்–1, அடங்கல் பதிவுகளை மொபைல் ஆப் மூலம் பதிவு செய்யும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து டி.ஆர்.ஓ முருகேசன் கூறுகையில், ஆன்ட்ராய்டு மொபைல் மூலம் தங்கள் பயிர் விபரங்களை பதிவு செய்ய, இ–அடங்கல் என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்து, தங்களது மொபைல் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். உடன், 'ஓ.டி.பி.,' எண் குறுஞ்செய்தியாக வரும். அதனை பதிவு செய்து, பரிவர்த்தனைகளை தொடரலாம். இவற்றில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால், சம்மந்தப்பட்ட வி.ஏ.ஓ., அல்லது வேளாண் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு தீர்வு பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu