ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் .
ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள போக்குவரத்து பணிமனை அலுவலகம் முன்பு இன்று ஈரோடு போக்குவரத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், 195 சதவீத அகவிலைப்படி உயர்வை ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். நிலுவை தொகையை 1995-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும். போக்குவரத்து ஓய்வூதியர் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
விருப்ப ஓய்வில் சென்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். பணியில் இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வழங்க வேண்டிய ரூ. 3 லட்சம் வழங்குவதுடன் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் பெறும் பெண்களுக்கு மருத்துவப்படி வழங்க வேண்டும். கூட்டுறவு சிக்கன கடன் சங்கம் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய பங்கு தொகை வட்டியை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu