ஈரோட்டில் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்

ஈரோட்டில் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்
X
15ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்கள், நிவாரணநிதி வழங்க வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 4 ஆயிரம் நிவாரணத் தொகையில் 2 கட்டமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த மாதம் முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் நிவாரண தொகை அனைத்து ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 1152 ரேஷன் கடைகள் மூலம் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட அட்டைதாரர்கள் கொரோனா நிவாரண தொகையான ரூ.2 ஆயிரத்தை ரேஷன் கடையில் சென்று பெற்றுக் கொண்டனர்.

ஜூன் 3-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளில் கொரோனா 2-ம் கட்ட நிவாரண தொகையான ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் இன்று முதல் வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகத்தை தொடங்கி உள்ளனர். .இன்று தொடங்கி வரும் 14ஆம் தேதி வரை இந்த பணி நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1152 ரேஷன் கடைகளுக்கு வரும் 15ஆம் தேதி முதல் கொரோனா இரண்டாம் கட்ட நிவாரண தொகை, 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.

நாளொன்றுக்கு 200 பேர் வந்து பொருட்கள் வாங்கும் வகையில் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்த டோக்கனை பொருட்கள் வினியோகிக்கப்படும் தேதி குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த நாட்களில் மக்கள் வந்தால் போதும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கொரோனா காரணமாக வெளியில் தனிமையில் இருப்பவர்கள் தனிமை காலம் முடிந்து ரேஷன் கடைகளில் நிவாரண தொகை, மளிகை பொருட்களை வாங்கி செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story