ஏ.டி.எம் மையத்துக்குள் புகுந்த பாம்பு

ஏ.டி.எம் மையத்துக்குள் புகுந்த பாம்பு
X
ஈரோடு நசியனூரில் ஏ.டி.எம் மையத்துக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு..!

ஈரோடு நசியனூர் ரோட்டில் தேசியமயமாக்கப்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியின் முன்பகுதியில் அந்த வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க ஒருவர் சென்றபோது அந்த ஏடிஎம் மையத்துக்குள் 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று சென்றதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தார். இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து அந்த ஏடிஎம் மையத்திற்குள் பொதுமக்கள் செல்ல அச்சம் அடைந்தனர். பின்னர் அந்த ஏடிஎம் மையம் அடக்கப்பட்டது. இதனையடுத்து ஏடிஎம் மையத்திற்குள் சென்ற பாம்பை பிடிப்பதற்காக பாம்பு பிடி வீரர் யுவராஜிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அந்த ஏடிஎம் மையத்திற்குள் சென்று பாம்பை பிடிக்க முயற்சியில் ஈடுபட்டார். ஏடிஎம் மையத்திற்குள் ஏ.சி.யை பிரித்து பாம்பைத் தேடியும் பாம்பு பிடிபடவில்லை. இதனால் அந்தப் பகுதி பரபரப்பாக காட்சியளித்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!