ஈரோடு புதிய பஸ்நிலைய வரைபடம் வெளியீடு; பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

ஈரோடு புதிய பஸ்நிலைய வரைபடம் வெளியீடு; பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு
X

ஈரோடு புதிய பஸ்நிலைய வரைபடம்.

Erode New Bus Stand-ஈரோடு சோலாரில் கட்டப்பட உள்ள புதிய பஸ்நிலையம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

Erode New Bus Stand-ஈரோடு மாநகர் பகுதிகளில் வாகன ஓட்டிகள் அதிகாரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் ஈரோடு மையப்பகுதியில் செயல்படும் ஈரோடு பஸ் நிலையத்தை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி சோலாரில் புது பஸ்நிலையம் கட்டப்பட உள்ளது. அதன் தொடர்ச்சியாக புதியதாக கட்டப்படும் பஸ் நிலையத்தின் வரைபடத்தை மாநகராட்சி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.

புதிதாக அமைய உள்ள பஸ் நிலையத்தில் 46 பஸ் ரேக்குகள், நான்கு பேரல்ரேக், கடைகள், அலுவலகம், நிர்வாக அலுவலகம், ரெஸ்டாரன்ட், டாக்சி ஸ்டாண்ட், ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளிட்ட பல விசயங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த கட்டுமான திட்ட வடிவத்தில் மக்கள் கருத்து தெரிவிக்க விரும்பினால் 9489092000 என்ற மொபைல் எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாகவும் அல்லது Commr.erode@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story