ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகளின் தரம் குறித்து அமைச்சர் முத்துசாமி ஆய்வு

ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகளின் தரம் குறித்து அமைச்சர் முத்துசாமி ஆய்வு
X

மருந்து அடிக்கும் கருவிகளை தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி வழங்கி பணியினை தொடங்கி வைத்தார்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகளின் தரம் குறித்து ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

கிறிஸ்டின் சொசைட்டி சார்பில் வீடு வீடாக வீட்டின் வெளிபுறங்களில் மருந்து அடிக்கும் நிகழச்சியின் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி மருந்து அடிக்கும் கருவிகளை வழங்கி பணியினை தொடங்கி வைத்தார். இதனையடுத்து விழாவில் பேசிய அமைச்சர் முத்துசாமி, கொரோனாவிலிருந்து பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

ஈரோட்டில் 10 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. ஈரோட்டில் தினமும் 100 முதல் 150 பேருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொற்று பரவல் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் ஒரு வார காலத்திற்கு கிறிஸ்டின் சொசைட்டி மூலம் வீடு வீடாக மருந்து அடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதலில் தினமும் 1000 வீடுகளுக்கு மருந்து அடிக்கப்படும். அதனை தொடர்ந்து 2000 வீடுகள் மற்றும் கடைகளுக்கு மருந்து அடிக்கப்படும். தமிழக அரசு ஒவ்வொரு துறையிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தற்போது நிதிநிலைமை மோசமாக இருப்பதால் அதனை விரைவில் சரிசெய்யப்பட்டு அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்.

மக்களை தேடி மருத்துவம் மற்ற நாடுகளும் பரிசீலனை செய்யும் அளவிற்கு முன்னோடியாக திகழ்கிறது. மாவட்டத்தில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் எங்கெங்கே வீடுகள் இருக்கின்றது என்பது குறித்து ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் சிதலமடைந்த வீடுகள் குறித்த கணக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகளின் தரம் குறித்த ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். அனைத்தும் சரியாக உள்ள வீடுகளின் பட்டியலை வாரியத்திடம் கேட்டுள்ளோம். விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு பட்டியல் வெளியிடப்படும் என்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!