விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தேமுதிகவினர் சிறப்பு அபிஷேக பூஜை

விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தேமுதிகவினர் சிறப்பு அபிஷேக பூஜை
X

ஈரோடு ஸ்ரீ ராஜ கணபதி திருக்கோவிலில் மஹா கணபதி ஆயுள் ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

ஈரோடு மாநகர் மாவட்ட கழகம் சார்பில் ஸ்ரீ ராஜ கணபதி பெருமானுக்கு, மஹா கணபதி ஆயுள் ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் டீச்சர்ஸ் காலனி பகுதியில் உள்ள ஸ்ரீ ராஜ கணபதி திருக்கோவிலில் மஹா கணபதி ஆயுள் ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் தலைமை தாங்கினார். இந்த பூஜையின் போது தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பூரண நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியாற்றிட வேண்டும் என வழிபாடு நடைபெற்றது.

இதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட கழக பொருளாளர் பாலாஜி, மாவட்ட துணை செயலாளர்கள் ரங்கராஜ், தாமரைச்செல்வி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் குமார், சஞ்சய்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் சுப்ரமணி, மாவட்ட நிர்வாகி மணிகண்டன், சூரம்பட்டி பகுதி கழக பொறுப்பாளர் வேல்முருகன், பகுதி அவைத்தலைவர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி முத்து, வட்ட செயலாளர்கள் சிவா,சுரேஷ், பிரகாஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!