சிறுமியிடம் சில்மிசம் : போலீசுக்கு 5 ஆண்டு சிறை

சிறுமியிடம் சில்மிசம் : போலீசுக்கு  5 ஆண்டு சிறை
X
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோவில் கைதான போலீசுக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஜார்கண்ட் மாநிலம் டோராடூன் மாவட்டத்தை சேர்ந்த 9 வயது சிறுமி தனது பெற்றோருடன் சென்னையில் இருந்து கோவைக்கு ரயிலில் பயணம் செய்துள்ளார். அதே ரயிலில் பயணம் செய்த திருப்பூர் மாவட்டம் ஊதியர் காவல்நிலைய போலீஸ் ஜெகன் என்பவர் சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறி அச்சிறுமியின் பெற்றோர் ஈரோடு ரயில்நிலைய காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.


புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் போலீஸ் ஜெகனை கைது செய்தனர்.

ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதில் போலீஸ் ஜெகனுக்கு 5 ஆண்டு சிறை சிறை தண்டனையும் 5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மாலதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags

Next Story
ai marketing future