ஈரோட்டில் ஓய்வு பெற்ற போராசிரியர் வீட்டில் கொள்ளை: 2 பேர் கைது

ஈரோட்டில் ஓய்வு பெற்ற போராசிரியர் வீட்டில் கொள்ளை: 2 பேர் கைது
X

கைது செய்யப்பட கொள்ளையர்கள் தமிழ்வாணன், அரவிந்தன்.

ஈரோட்டில் ஓய்வு பெற்ற போராசிரியர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போராசிரியர் சண்முகவேலன். கடந்த மாதம் இவரது வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 23 சவரன் தங்கநகை மற்றும் 10 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் தெடர்பாக ஈரோடு வடக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையாக கூறி இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த தமிழ்வாணன், அரவிந்தன் என்பதும் மூன்று பேர் சேர்ந்து ஓய்வு பெற்ற போராசிரியர் வீட்டில் கொள்ளையடித்ததையும் ஒப்பு கொண்டனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து 1 லட்ச ரூபாய் ரொக்க பணம் மற்றும் டிவி ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறை காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!