ஈரோட்டில் அரசு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையம் தொடங்க கோரிக்கை

ஈரோட்டில் அரசு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையம் தொடங்க கோரிக்கை
X

ஈரோடு  காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையத்தை அரசு தொடங்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

ஈரோட்டில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையத்தை அரசு தொடங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையத்தை அரசு தொடங்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில்,

கொரோனா தொற்றின் 2ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரதுறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் கொரோனா தாக்கம் தினசரி அதிகரிப்பதோடு உயிரிழப்புகளும் அதிகரிப்பதால் மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் நோய் தொற்று பாதித்தவர்களுக்கு அவசர சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்துவதால் கள்ள சந்தையில் வியாபாரம் செய்யப்படுகிறது. இதனால் பெரியளவில் தட்டுபாடு ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏழை நடுத்தர மக்கள் கொரோனா பாதித்து மருத்துவ சிகிச்கைக்கு வழியின்றி பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே மாவட்ட ஆட்சித்தலைவர் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு சென்னையில் கீழ்பாக்கம் மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையம் அரசு சார்பில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருவதுபோல், ஈரோட்டிலும் அரசு சார்பில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையத்தை போர்கால நடவடிக்கை எடுத்து உடனே திறக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story