ஈரோட்டில் ராஜீவ்காந்தி நினைவு நாள் : காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை

ஈரோட்டில் ராஜீவ்காந்தி நினைவு நாள் : காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை
X

ஈரோடு காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி நினைவு நாளில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இன்று ராஜீவ்காந்தியின் 30-வது நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருவதையொட்டி அவரது படத்திற்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. அதன்படி இன்று காலை மூலப்பட்டறையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கினார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன், ராஜீவ்காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி. ரவி தலைமையில் கிருஷ்ணம் பாளையம் சித்தன் நகர் மக்களுக்கு கபசுரக் குடிநீர், முக கவசம் வழங்கினார்.

இதைப்போல் கருங்கல்பாளையம் உள்பட பல்வேறு பகுதி மக்களுக்கும் கபசுரக் குடிநீர், முக கவசம் வழங்கப்பட்டது. ஆனூர் தியேட்டர் அருகே செவிலியர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் பாதுகாப்பு உடைகள், குழந்தைகளுக்கு பவுடர்கள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!