ஆக்சிஜன் செறிவூட்டும் மெஷின், சிலிண்டர்கள் ஈரோட்டுக்கு வருகை
கோப்பு படம்
தமிழகத்தில் கொரோனா 2ம் அலையின் தாக்கம் அதிகளவில் உள்ளது. கடந்த சில தினங்களாக, தொற்று பாதிக்கப்படும் மக்களுக்கு , தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து, ஆக்சிஜன் குறைபாடுகளை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அவ்வகையில், இன்று சென்னை மாநகராட்சியில் இருந்து ஆக்சிஜன் செறிவூட்டும் மெஷின்-100, ப்ளோ மீட்டர்-30, ஆக்சிஜன் மாஸ்க்-30, பி'டைப் சிலிண்டர்-30, சென்னை சிப்காட் நிறுவனத்திடம் இருந்து டி'டைப் சிலிண்டர்-100 மற்றும் சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் ஏற்பாட்டில் 100 ஆக்சிஜன் செறிவூட்டும் மெஷின்கள் ஆகியன, ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தடைந்தன. இவை அனைத்தும் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், பெருந்துறையில் உள்ள அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றிற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்து, ஈரோடு கலெக்டர் கதிரவன் கூறுகையில், ஏற்கெனவே இருப்பில் உள்ள ஆக்சிஜன் மற்றும் புதிதாக வந்தவை என, மாவட்டத்திற்கு தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பில் உள்ளது. எனவே பொதுமக்கள் பயப்படாமல் சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu