தாகம் தீர்த்த மூதாட்டியை தீர்த்து கட்டிய மர்ம நபர்

தாகம் தீர்த்த மூதாட்டியை தீர்த்து கட்டிய மர்ம நபர்
X
7 சவரன் தங்க நகைக்காக, மர்ம நபர் ஒருவர் மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி மணிமேகலை (வயது 62). இவர்களுக்கு ரவி என்ற மகனும் ராணி என்ற மகளும் உள்ளனர். மகன் மகள் இருவரும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இதனிடையே பழனிச்சாமி இறந்துவிடவே மணிமேகலை மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று மாலை மணிமேகலையின் வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளான். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட எஸ்.பி. தங்கதுரை நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். போலீசிரின் முதற்கட்ட விசாரணையில் மர்ம நபர் குடிக்க தண்ணீர் கேட்டு உள்ளே வந்துள்ளதும் மூதாட்டி தனியாக இருப்பதையறிந்து அவர் அணிந்திருந்த 7 சவரன் தங்க நகைக்காக இந்த கொலை நடந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. பின்னர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கொலையாளி விட்டு சென்ற தடயங்களை சேகரித்தனர். இதனையடுத்து மணிமேகலையின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மூதாட்டியை கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!