அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய மருத்துவ பட்டதாரிகளுக்கு அழைப்பு

அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய மருத்துவ பட்டதாரிகளுக்கு அழைப்பு
X
கோவிட்-19 பேரிடரில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய மருத்துவ பட்டதாரிகளுக்கு அழைப்பு....

தமிழகத்தில் கொரோனாவின் 2ம் அலையின் தாக்கம் வேகம் எடுத்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அனைத்து மருத்துவமனைகளிலும் அதிக அளவில் நோயாளிகள் வந்த வண்ணம் உள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க அதிக அளவில் டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் அமர்த்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெகட் கதிரவன் வெளியட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

ஈரோடு மாவட்டத்தில் கோவிட்-19 பேரிடர் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு, பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் மூன்று மாத காலத்திற்கு (31.08.2021 வரை) பொது,முதுநிலை மருத்துவர், 100 தகுதியுடைய மருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படவுள்ளனர். அவர்களை சுகாதாரப்பணிகள் துணை இயக்குநரின் மூலமாக தேர்வு செய்யப்படும் என்றும் அவர்களை வரும் காலங்களில் தேவைக்கேற்ப பணி நீட்டிப்பு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

TNMC பதிவின் கீழ் பொது மருத்துவர் (MBBS)கல்வி தகுதியில் ரூ.60,000/- மாதாந்திர தொகுப்பூதியமும் மற்றும் முதுநிலை மருத்துவர் (நுரையீரல் நிபுணர்)க்கு அரசு நிர்ணயித்த ஊதியத்தின் அடிப்படையிலும் என 100 மருத்துவ அலுவலர்களும், DGNM / Nursing என்ற கல்வி தகுதியில் ரூ.14,000/- மாதாந்திர தொகுப்பூதியத்துடன் 500 செவிலியர்களும் நியமனம் செய்யப்படவுள்ளனர். மேலும், தகுதியின் அடிப்படையில், 20 லேப் டெக்னீசியன்கள் மற்றும் 5 எக்ஸ்ரே டெக்னீசியன்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

தகுதியுடைவர்கள் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

1.கல்வித்தகுதி சான்றிதழ்

2. அடையாள அட்டை

3.மருத்துவக் கவுன்சில் பதிவு சான்றிதழ் (மருத்துவர்களுக்கு மட்டும்)

4. பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் - 1

விருப்பமுள்ள நபர்கள் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்), துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) அலுவலகம், திண்டல் ஆரம்ப சுகாத நிலையம் அருகில், ஈரோடு என்ற முகவரியில் நளை முதல்(20ம்தேதி) தங்களுடைய அசல் சான்றிதழ், புகைப்படம் மற்றும் மேற்கண்ட ஆவணங்களுட அணுகலாம் எனவும் மேலும் விபரங்களுக்கு 7708722659 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story