மளிகை வியாபாரியிடம் ரூ.4.55 லட்சம் பறிமுதல்

மளிகை வியாபாரியிடம் ரூ.4.55 லட்சம் பறிமுதல்
X
சோலார் பிரிவில் மளிகை வியாபாரியிடம் ரூ.4.55 லட்சம் பறிமுதல் செய்து பறக்கும் படையினர் நடவடிக்கை...

ஈரோடு சோலார் பிரிவில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் ரூ. 4 லட்சத்து 55 ஆயிரத்து 700 ரூபாய் இருந்தது தெரியவந்தது.

விசாரணயில் காரை தவ்பித் மைதீன் என்பவர் ஓட்டி வந்ததும், இவர் மளிகைக் கடையில் வசூலான பணத்தை கொண்டு வந்த போது சோதனையில் சிக்கியது தெரியவந்தது. இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் இதனை ஈரோடு மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சைபுதீனிடம் ஒப்படைத்தனர். பணத்திற்கான உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைப் பெற்றுச் செல்லலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!