/* */

27 % இட ஒதுக்கீடு கிடைத்ததற்கு காரணம் பா.ஜ.கவின் மோடி அரசுதான்

27 சதவீத இடஒதுக்கீடு கிடைத்ததற்கு காரணம் பா.ஜ.கவின் மோடி அரசுதான் என்று மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி தெரிவித்தார்.

HIGHLIGHTS

27 % இட ஒதுக்கீடு கிடைத்ததற்கு காரணம்  பா.ஜ.கவின் மோடி அரசுதான்
X

மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி பேட்டி

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி பாஜக தெற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

கடந்த 50 ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சியும் திமுகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்தவித சலுகைகளும் வழங்காமல் கிடப்பில் போட்டது. ஓட்டு வங்கிக்காக அதில் கவனம் செலுத்தவில்லை. 2016 ல் பாஜக வந்த பிறகு உயர்நீதிமன்றத்தில் வாதாடி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மருத்துவத்தில் 27 சதவீதம் இட ஒதுக்கீடு வாங்கி தந்துள்ளது.

இதேபோல் பெருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்ற இந்த சட்டம் மத்திய மோடி அரசு மூலம் பெறப்பட்டுள்ளது.

சமூகத்தில் அனைத்து சலுகைளும் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் பிரதமர் மோடி இதுபோன்ற சட்டத்தை பெற்று தந்துள்ளார்.

இச்சட்டங்கள் பிராமணர்களாக செய்யும் சலுகை என்று திமுக அரசு பொய் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது. 8 கோடி மக்கள் உள்ள தமிழகத்திற்கு 11 மருத்துவக்கல்லூரி கிடைத்துள்ளது.

ஆனால் 13 கோடி மக்கள் உள்ள மத்திய பிரதேசத்திற்கு 13 மருத்துவக்கல்லூரி மட்டுமே கிடைத்துள்ளது. தமிழகத்தின் மேல் அக்கறை உள்ளதால் தான் அனைத்து விதத்திலும் தமிழகம் முன்னேற பாஜக செயல்பட்டு வருகிறது

தற்போது அறிவத்துள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவத்தில் 27 சதவீத இட ஓதுக்கீடு உட்பட தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்காக மத்திய அரசு கொண்டு வரும் புதிய திட்டங்கள் அனைத்தும் திமுக அரசு தங்களுடையது என பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சாசண அங்கீகாரம் மோடி அரசால் வழங்கப்பட்டது.

மத்திய அரசின் திட்டங்களான அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் மூலம் வரும் 2025க்குள் அனைவருக்கும் வீடு கிடைக்கும்.

இதேபோல் கர்ப்பிணி தாய்மார்களுககு வழங்கப்படும் நிதியுதவி, செல்வ மகள் சேமிப்பு திட்டம், முதியவர்களுக்கு காப்பீடு பென்சன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மத்திய பாஜக அரசால் கொண்டு வரப்பட்டது.

ஜன் ஜீவன் திட்டம் மூலம் இந்தியாவிலேயே மொடக்குறிச்சி தொகுதியில் தான் காவிரி ஆற்றில் இருந்து நேரடியாக அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் அமைத்து குடீநீர் விநியோகம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது . மொடக்குறிச்சியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்க உள்ளது.

இதுபோன்ற மத்திய மோடி அரசின் திட்டங்கள் அனைத்தையும் தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டதால் இனிமேல் தமிழக மக்கள் பாஜக பக்கம் தான் இருப்பார்கள் என்றார்.

Updated On: 1 Aug 2021 9:14 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...