விபத்தை தடுக்க நவீன கட்டமைப்பு வசதி : திமுக வேட்பாளர் முத்துசாமி

விபத்தை தடுக்க நவீன கட்டமைப்பு வசதி : திமுக வேட்பாளர் முத்துசாமி
X

ஈரோடு மேற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் சு.முத்துசாமி, ஆளிச்சாம்பாளையம், கணக்கங்காடு, அருந்ததியர் காலனி, தயிர்பாளையம், வேட்டைபெரியாம் பாளையம், சாமிகவுண்டன்பாளையம், மேற்குபுதுார், வசந்தம் கார்டன் காலனி, சி.எஸ்.ஐ., தெரு, நசியனுார், சிந்தன்குட்டை பகுதியில் உதய சூரியன் சின்னத்தில் ஓட்டு சேகரித்தார்.

அப்பகுதியில், வேட்பாளர் சு.முத்துசாமி பேசியதாவது: ஈரோடு மேற்கு தொகுதி மேம்பாட்டுக்காக, அ.தி.மு.க., அரசு எந்த பணியும் செய்யவில்லை. குடிநீர், கழிவு நீர் சாக்கடை, தெரு விளக்குகள், தார் சாலை, பொது கழிப்பறை, புதிய பஸ் வழித்தடம் என எதையும் ஏற்படுத்தவில்லை. மேற்கு தொகுதி, சித்தோடு முதல் தயிர்பாளையம் வரை சாலை விபத்து அதிகரித்து, பலர் இறந்துள்ளனர். இதனை தடுக்க, சாலை விரிவாக்கம், பாதுகாப்பை வலுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். விபத்தை தடுக்க நவீன கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படும் என பேசினார்.

தொடர்ந்து பழையூர் தெற்கு தெரு, கருப்பண்ண கவுண்டனர் வீதி, லட்சுமி நகர், பெருமாபாளையம், மூலப்பாளையம், விருமாண்டம்பாளையம், கரை எல்லப்பாளையம் அய்யம்பாளையம் உட்பட பல்வேறு இடங்களில் ஓட்டு சேகரித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!