/* */

கலைஞர் நினைவுநாள்: திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவு நாளையொட்டி ஈரோட்டில் திமுகவினர் கலைஞரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

HIGHLIGHTS

கலைஞர் நினைவுநாள்: திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
X

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து முனிசிபல் காலனியில் உள்ள கலைஞர் சிலைக்கு திமுக துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஷ், மாவட்ட துணை செயலாளர் சின்னனையன், மாவட்ட பொருளாளர் பழனிசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் குமாரசாமி, மைவிழி முருகேசன், பகுதி செயலாளர் அக்னி சந்துரு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் வீதிகள் தோறும் ஆங்காங்கே கலைஞர் திருவுருவ படம் வைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களில் கட்சி நிர்வாகிகள் சார்பில் உணவு வழங்கப்பட்டது.

Updated On: 7 Aug 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  3. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  5. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  10. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்